Sunday, August 26, 2007

Onam celebrations are on the way

clipped from www.dinamalar.com
கேரளாவில் ஓணம் பண்டிகை ஏற்பாடு: பூக்கள் குவிகிறது
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை ( 27 ம் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இருந்து பூக்கள் மூடை, மூடையாக குவிந்து வருகிறது. வண்ணகோலம் . பூக்கோலம் போட்டு புத்தாடை அணிந்து கொண்டாடும் இந்த விமரிசையான விழாவிற்காக கேரள மக்கள் தயாராகி வருகின்றனர். கர்நாடாகாவில் இருந்தும் கேரளாவுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
 blog it

Tuesday, August 21, 2007

five more arrested for Thenkasi murder

clipped from www.dinamalar.com
தென்காசி கொலை மேலும் 5 பேர் கைது
திருநெல்வேலி: தென்காசி கொலை வழக்கில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசியில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மேலகரம் அலெக்ஸ்(27), பாரதிநகர் ஆப்ரகாம்(26), வேலாயுதபுரம் பேரின்பராஜ்(24), மேலவாலிபன் பொத்தை கண்ணன்(23), மலையான் தெரு தங்கதுரை(19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 blog it

If India conducts atomic tests we will also conduct : Pakistan

clipped from www.dinamalar.com
  இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் நாங்களும் நடத்துவோம் : பாகிஸ்தான
இஸ்லாமாபாத் : இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் பாகிஸ்தானும் சோதனை நடத்தும் என கூறியுள்ளது. இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் பிரச்னை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவும் இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும் என கூறியுள்ளது. இந்நிலையில் இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் பாகிஸ்தானும் நடத்தும் என அந்நாடு கூறியுள்ளது. மேலும் எல்லை பகுதியில் பதட்டம் அதிகரிக்கும் எனவும், பிரச்னைகளை அதிகபடுத்தும் எனவும் கூறியுள்ளது.
 blog it

Sudden Raid in karnataka prison

clipped from www.dinamalar.com
கர்நாடகா சிறையில் அதிரடி ரெய்டு : கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்
ஹூப்ளி : கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்ளி தார்வாட் சிறையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ஹூப்ளி தார்வாட் போலீஸ் கமிஷனர் நாராயணா நடுமணி உத்தரவின்பேரில் இந்த ரெய்டு நடந்தது. அப்போது சிறை கைதிகளிடம் இருந்து 15 மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதி ஒருவர் குண்டுகளையும் மறைத்து வைத்திருந்தது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
 blog it

Bomb Threat in Mumbai College

clipped from www.dinamalar.com
மும்பை கல்லூரியில் வெடிகுண்டு புரளியால் பரபரப்பு
மும்பை : மும்பை பார்லே பகுதியில் மீதிபாய் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு இன்று காலை ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம மனிதர் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து கல்லூரி முழுவதும் சோதனையிட்டனர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இந்த வெடிகுண்டு புரளியால் மும்பையில் பரபரப்பு நிலவி வருகிறது.
 blog it

Monday, August 20, 2007

The Practise Devadasi is Still continuing in India

clipped from www.bbc.co.uk
இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறது

இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.

அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.

??????????
 blog it

Two people were murdered in public near Nellai

clipped from www.dinamalar.com
நெல்லை அருகே நடுரோட்டில் 2 பேர் வெட்டிக் கொலை
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அதே பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர்கள் 2 பேரும் இன்று அங்குள்ள காமராஜ் நகரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவமும், முருகானந்தமும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இருவரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 blog it

Rupees 10 Crores alloted for improvement of Roadways

clipped from www.dinamalar.com
ரோடுகளை தரம் உயர்த்த ரூ.10 கோடி ஒதுக்கீடு
காரைக்குடி :நடப்பாண்டில் 4 மாநகராட்சி, 56 நகராட்சிகளில் மண் ரோடுகளை தார் ரோடாக தரம் உயர்த்த அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் சிமென்ட், தார், மெட்டல், மண் ரோடுகள் உள்ளன. நான்கு ரக ரோடுகளையும் தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.செங்கல்பட்டு, வேலூர், சேலம்,திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மண்டலங்களில் 56 நகராட்சிகளில் 60.133 கி.மீ.,மண் ரோடுகள் ரூ.8.20 கோடியில் தார் ரோடுகளாக தரம் உயர்த்தப்படும். மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மாநகராட்சிகளில் 13.150 கி.மீ.,மண்ரோடுகள் ரூ.1.80 கோடியில் தார் ரோடுகளாக தரம் உயர்த்தப்படும் என அரசு செயலர் (உள்ளாட்சிதுறை) தீனபந்து தெரிவித்துள்ளார்.
 blog it

Fifteen terrorists arrested in Manipur

clipped from www.dinamalar.com
அல்-குவைதா தீவிரவாதிகள் 15 பேர் மணிப்பூரில் கைது
மணிப்பூர் : மணிப்பூரில் இன்று 15 அல்-குவைதா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த இந்த 15 பேரையும் அசாம் போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் போதுமான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் 15 பேரும் தீவிரவாத இயக்கமான அல்-குவைதா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் 10 பேர் மியான்மரில் இருந்தும், வங்கதேசத்தில் இருந்து 5 பேரும் வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
 blog it

Opposite parties should understand the need of atomic power : Says Manmohan Singh

clipped from www.dinamalar.com
அணுசக்தியின் தேவையை இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் : பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு
புதுடில்லி : டில்லியில் ஓ.என்.ஜி.சி நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- நாட்டின் எரிசக்தி தேவைகளை சரிசெய்ய அணுசக்தியின் தேவை அவசியம். பெருகி வரும் ஆற்றல் தேவையை நிவர்த்தி செய்ய புதிய யுக்தி ஒன்று தேவை. இதனை அணுசக்தி மற்றும், சூரிய சக்தி நிறைவு செய்யும். அணுசக்தி தேவையை அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்த அரசு இறங்கியுள்ளது. எனவே, அணுசக்தியின் தேவையை இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
 blog it

Mild Earthquake in Maharastra

clipped from www.dinamalar.com
மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம
புனே: மகாராஷ்டிராவின் புனே பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கே பரபரப்பான சூழல் நிலவியது.
புனேயின் கொய்னா பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நில அதிர்வானது 128 கி.மீ., வரை உணரப்பட்டதாக செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வினால் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
 blog it

Fire accident in passengers aircraft

clipped from www.dinamalar.com
விமானத்தில் தீவிபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
டோக்கியோ : இன்ஜின் பழுதடைந்த விமானம் ஜப்பானில் தரையிறங்கியதும், அவசர வழியாக பயணிகள் அனைவரும் வெளியேறிய சில நிமிடத்தில் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது.
தைவானைச் சேர்ந்த சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-800 ஜெட் ரக விமானம், தைபேயில் இருந்து 165 பயணிகளுடன் புறப்பட்டது. விமானத்தின் இடது பக்க இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதையடுத்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அவசர பாதை வழியாக தரையிறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஜப்பானின் ஒகினாவா தீவின் தென் பகுதியில் உள்ள நாகா நகர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது. தீயை அணைத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 blog it

Student Protest against private engineering college in Nellai

clipped from www.dinamalar.com
கல்லூரி மாணவர்கள் போராட்டம
திருநெல்வேலி : நெல்லை ஸ்காட் சுயநிதி இன்ஜினியரிங் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஸ்காட் இன்ஜினியரிங் கல்லூரி செயல்படுகிறது. கடந்த 18ம் தேதி மாலையில் கல்லூரிக்கு சொந்தமான பஸ்களில் மாணவர்கள் நெல்லை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது இரண்டு பஸ்களும் போட்டி போட்டு வேகமாக சென்றதால் ஒரு பஸ் மேலச்செவல் அருகே ரோட்டோர மரத்தில் மோதியது. இதில் 20 மாணவ, மாணவிகள் காயமுற்றனர். பலத்த காயமுற்ற மாணவிகள் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி பஸ்சில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் காயமுற்றவர்களுக்கான மருத்துவ செலவை கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்கள் கேட்டனர். நிர்வாகம் மறுத்ததால் மாணவர்கள் சேரன்மகாதேவி கல்லூரி வளாகத்தில் தரையில் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ.,ஆனிமேரி ஸ்வர்ணா, டி.எஸ்.பி.,கிங்ஸ்லின் உள்ளிட்டவர்கள் வந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
 blog it

Indians assaulted in Germany

clipped from www.dinamalar.com
பெர்லின்: கிழக்கு ஜெர்மனியின் மியூஜெல்ன் நகரின் ஒருபகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட இந்தியர்கள் மீது இனவெறி கொண்ட கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு அவர்களை தாக்கியது. இதில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசாரும் படுகாயமுற்றனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் 50 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் குல்வீர்சிங் என்ற இந்தியர் அதிகமாக பாதிப்படைந்துள்ளார்.